ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம்.

 தெரிந்ததும் தெரியாததும்.


ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம்.


கடல்குதிரைகள் தான்..!!


ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம்... கண்களை எந்தப் பக்கமும் திருப்புதல்குதித்து குதித்து ஓடும் ஒருவகை மீன் இனம்குதிரை போன்ற முக அமைப்புகுரங்கு போன்ற வால்ஆண்இனங்கள் இனப்பெருக்கம் செய்தல் இப்படியாக பல்வேறு சிறப்புகளையுடைய அரியவகை கடல்வாழ்உயிரினமான கடல் குதிரைகள் பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவதை அரசுதடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.


உடலமைப்பை பொருத்தவரை நன்கு நீண்டு வளையங்களால் அமைந்தது போன்றும் வாய் நீண்டு குழல்போலவும் மார்புப் பகுதி சற்று அகன்று விரிந்தும் காணப்படுகிறதுஉடலில் பக்கவாட்டுக் கோடுகள் மற்றும்நீண்ட புள்ளிகள் தென்படுகின்றனசுமார் 6 செ.மீ முதல் 17 செ.மீ வரை நீளமும் எடை 4 கிராம் முதல் 14 கிராம்வரையும் இருக்கிறது.


பெண் கடற்குதிரைகள் தங்களின் முட்டைகளை (200) ஆண்களின் வால் பகுதியில் உள்ள இனப்பெருக்கப்பைகளில் விட்டுவிடும்அதனை ஆண் கடற்குதிரைகள் கங்காரு போல நன்கு பேணி ஆறு வாரங்கள் பாதுகாத்துகுஞ்சுகளாகப் பொரிக்கின்றனகுஞ்சுகளின் எண்ணிக்கையும் 50 முதல் 100 வரை இருக்கும்பிறக்கும்குஞ்சுகளின் நீளம் ஏறத்தாழ ஒரு செ.மீட்டராக இருந்தாலும் பெற்றோரின் பாதுகாப்பு அதிகமாகவே இருக்கும்.


உலகில் மொத்தம் 35 வகையான கடல் குதிரைகள் காணப்படுகின்றனஇவை பெரும்பாலும் ஆழம் குறைந்தகடல் பகுதிகளான கடற்புற்கள் பவளப்பாறைகள் நிரம்பிய இடங்களில் வாழ்கின்றன இவற்றின் முக்கிய உணவுஇறால்களாகும்கடல் குதிரைகள் தங்களின் வாலைப் புல்களில் கட்டிக்கொண்டு நிற்க முடியும்இதன் உடல்கடினமான எலும்பு போன்ற பொருள்களினால் ஆன போதிலும் நண்டு பெங்குவின் முதலியன இவற்றைவேட்டையாடி உண்கின்றனபெரும்பாலான மீன்கள் கடல் குதிரையைக் கண்டுகொள்வதில்லைகடல்குதிரைக்குக் கடலில் உள்ள விரோதிகளைக் காட்டிலும் நிலத்தில் உள்ள விரோதியான மனிதன் தான் மிகுந்ததொல்லை கொடுக்கிறான்.


ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம்...மீன் இனத்தைச் சேர்ந்த உயிரினம் தான்கடல்குதிரைபார்ப்பதற்கு முதலைக் குட்டியைப் போலிருக்கும்ஆண் கடல் குதிரையின் வாலின் கீழே பைபோன்ற அமைப்பு இருக்கும்ஆண் கடல் குதிரைகளின் இந்தப் பையில்தான் பெண் கடல் குதிரைகள்முட்டையிடுகின்றனமுட்டைகள் பொரிவதும் வெளிவரும் குஞ்சுகள் சிறிது காலம் வளர்வதும் இந்தப்பையில்தான்


முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும் நேரத்தில் அப்பா கடற்குதிரைக்கு பிரசவ வலி வரும்அப்போதுஅது நீருக்கடியில் உள்ள புதற்களுக்கிடையே கிடந்து மிகவும் சிரமப்படும்உடலை முன்னும் பின்னுமாகஅசைத்து வளைக்கும்இப்படி வளையும்போது பையின் தசைகள் விரிவடையும்ஒவ்வொரு முறை வளையும்போதும் ஒவ்வொரு குஞ்சு வெளிவரும்.


இதில் பிரச்சனை என்னவென்றால் கடல்குதிரையின் இனப்பெருக்க வேகம் மிகவும் குறைவுமனிதர்களுக்குவேகத்தைத் தரும் கடல் குதிரைகளுக்குத் தான் வேகம் வருவதில்லைஇப்படியே போனால் எதிர்காலத்தில்கடல் குதிரைகள் என்கிற இனம் என்ன ஆகுமென்று யாருக்கும் தெரியாது.

Comments

Popular posts from this blog

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

உணவை உட்கொள்ள விதிமுறைகள்:

உலகத்தின் ராஜா யார்..?