Posts

உலகத்தின் ராஜா யார்..?

  உலகத்தின்   ராஜா   யார் ..? ஒரு   சக்கரவர்த்தி   இருந்தான் .  அவன்   அனேக   நாடுகளைப்   போரிட்டு   வென்றான் .  உலகம்   முழுவதையும்   தன் ஆட்சியின்கீழ்   கொண்டுவர   வேண்டும்   என்பதுதான்   அவனது   லட்சியம் .  அவன்   ஒரு   சண்டையில்   வென்ற   பிறகு தன்   நாட்டிற்குத்   திரும்பிச்   சென்று   கொண்டிருந்தான் . அப்போது   ஒரு   வயதான   துறவியைப்   பார்த்தான் .  அவர்   அழகான   இயற்கைச்சூழலில்   தனித்திருந்து   பக்திப் பாடல்களைப்   பாடி   மகிழ்ந்து   கொண்டிருந்தார் .  அவர்   குரலிலே   அன்பு   பெருகியது .  கண்களில்   அறிவின்   ஒளி தெரிந்தது . சக்கரவர்த்தி   அவரை   நெருங்கிச்   சென்று   கேட்டான் : "" என்னை   யார்   என்று   தெரிகிறதா ?''  துறவி   சற்று   நேரம் மெ ü னமாக   இருந்தார் . பிறகு ,  அதே   கேள்வியை...

ஆண் இனங்களிலேயே பிரசவிக்கும் திறன்படைத்த ஒரே உயிரினம்.

  தெரிந்ததும்   தெரியாததும் . ஆண்   இனங்களிலேயே   பிரசவிக்கும்   திறன்படைத்த   ஒரே   உயிரினம் . கடல்குதிரைகள்   தான் ..!! ஆண்   இனங்களிலேயே   பிரசவிக்கும்   திறன்படைத்த   ஒரே   உயிரினம் ...  கண்களை   எந்தப்   பக்கமும்   திருப்புதல் ,  குதித்து   குதித்து   ஓடும்   ஒருவகை   மீன்   இனம் ,  குதிரை   போன்ற   முக   அமைப்பு ,  குரங்கு   போன்ற   வால் ,  ஆண் இனங்கள்   இனப்பெருக்கம்   செய்தல்   இப்படியாக   பல்வேறு   சிறப்புகளையுடைய   அரியவகை   கடல்வாழ் உயிரினமான   கடல்   குதிரைகள்   பல்வேறு   காரணங்களால்   கொஞ்சம்   கொஞ்சமாக   அழிந்து   வருவதை   அரசு தடுக்க   தீவிர   நடவடிக்கை   எடுக்க   வேண்டும் . உடலமைப்பை   பொருத்தவரை   நன்கு   நீண்டு   வளையங்களால்   அமைந்தது   போன்றும்   வாய்   நீண்டு   குழல் போலவ...

காலை எழுந்தவுடன் என்ன சாப்பிடலாம்...?

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் வெறும் வயிற்றில் லிட்டர் லிட்டராகத் தண்ணீர் குடிப்பது, தேன் கலந்த வெந்நீர் அருந்துவது, காலையில் நடைப்பயிற்சிக்குச் செல்லும் வழியில் மூலிகைச் சாற்றை அருந்துவது, பச்சை முட்டை குடிப்பது என்று அவரவர்களுக்கு என்ன தோன்றுகிறதோ, அதை செய்கிறார்கள்.  உண்மையில் காலையில் வெறும் வயிற்றில் என்ன சாப்பிடலாம், நீராகாரம் : காலையில் எழுந்த உடன் நீராகாரம் அருந்துவது இன்றும் கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும் பழக்கம்.  இதனால், உடலுக்குக் குளிர்ச்சியும், தேவையான கார்போஹைட்ரேட் சத்தும் கிடைக்கிறது.  நீராகாரத்துடன் கடைந்த மோர் சேர்த்துக் குடிப்பது மிக நல்லது.  மோரில் உள்ள லாக்டோபேசில்லஸ் என்னும் பாக்டீரியா, உடலுக்கு நன்மை செய்வதுடன், வயிற்றில் வைட்டமின்கள் உற்பத்திக்கும் உதவுகிறது.

தூங்கும் முறை பற்றி சித்தர்கள் கூறும் அரிய விளக்கம்..!!!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் முக்கியமான ஒன்றுதான் உறக்கம் எனும் தூக்கமாகும். இது உடலின் ஆரோக்கியத்தைக் காப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. மனிதனின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு தூக்கத்தில் தான் கழிகின்றது. உடலிலுள்ள கோடிக்கணக்கான செல்களை தினமும் புதுப்பிக்கவும், உடலின் சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும், உடல் வளர்ச்சி [குறிப்பிட்ட வயது வரை ]பெறவும், தூக்கம் இன்றியமையாததாக உள்ளது. இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர். தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர். தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று. சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்த...

நாம் உண்ணும் உணவு சரியானதுதானா..? கண்டுபிடிக்க ஒரு எளிய வழி:

எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ, உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு, உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ, அல்லது வெய்யிலின் காரணமாகவோ, அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ, அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும். விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம், காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர் மட்டும் அதிகம் செலவாகிறது. அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்கு தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன் காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம். இதனால்  “உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் கூடவோ, குறையவோ உடல் நலத்துக்குத் தீங்...

உணவை உட்கொள்ள விதிமுறைகள்:

நின்று   கொண்டு   சாப்பிடும்   பழக் கதை   மாற்றி .  குடும்பத்துடன்   அமர் ந்து   ஒன்றாய்   சாப்பிடுங்க . எந்த   வகை   சாப்பாடாக   இருந்தாலும்   நன்றாக   மென்று   சாப்பிடுங்கள் . தொன   தொனனு   பேசிக்   கொண்டு   சாப்பி டவேண்டாம் . சாப்பிடும்   பொழுது   இடையில்   தேவை யில்லாமல்   தண்ணீர்   குடிக்காதிங் க .  கடைசியில்   தண்ணீர்   குடிக்க மற க்காதிங்க . அவசர   அவசரமாக   சாப்பிட   வேண்டாம் . பிடிக்காத   உணவுகளை   கஷ்டபட்டு   சா ப்பிட   வேண்டாம் . பிடித்த   உணவுகளை   அளவுக்கு   அதி கமாகவும்   சாப்பிட   வேண்டாம் . ஆரோக்கிய   உணவுகளை   சிலர்   பிடிக் காமல்   வைத்துவிடுவாங்க ..  அப்படி செய்யாமல்சாப்பிட   பழகவும் . இரவு   உணவில்   கீரை   உணவுகளை   சேர் க்க   வேண்டாம் . சாப்பாட்டுக்கு   பின்பு   பழங்கள்   சாப்பிட   வேண்டாம் . சாப்பிடும் ...

பனை கருப்பட்டி.

கருப்பட்டி.., பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இதனைப் பனைவெல்லம் என்றும் அழைப்பர். பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். • கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும். கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும். • கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும். • குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது. • சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும். அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.